நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மீண்டுடெழுந்த நடிகர் சத்தியா: தனது அசாதாரண நடிப்பால் ரசிகர்களை மீண்டும் கவர்ந்தார்

கோலாலம்பூர்:

கடந்த சனிக்கிழமை ரியாலிட்டி நிகழ்ச்சியான மியுசிகல் லாவாக் சூப்பர்ஸ்டாரின் ஐந்தாவது சீசனின் இறுதிப் போட்டியில் மூத்த நகைச்சுவை நடிகரான 61 வயதான சத்தியா  தோன்றினார்.

இது 1990களில் இருந்து பிரபலமான சிட்காம், பிமாய் பிமாய் டாங் து உடன் ஒத்த கலைஞரான சத்யாவின் குறும்புகளைப் பார்க்காத ரசிகர்களின் ஏக்கத்தைத் தணித்தது.

முன்னதாக, நீரிழிவு நோயால் ஏற்பட்ட சிக்கல்களால் அவரது இடது கால் துண்டிக்கப்பட்டது. மேலும் பல நோய்களுக்கு வழிவகுத்ததால், சத்தியா கலை நடவடிக்கைகளில் இருந்து நீண்ட இடைவெளி எடுக்க வேண்டியிருந்தது.

இந்நிலையில் இறுதிப் போட்டியில் ஃபாட் போசி, ஷெரிப் ஜீரோ, நக்கியு ஆகியோரைக் கொண்ட ரோடா குழுவுடன் சத்தியா தோன்றியது அவர்களுக்கு இரண்டாம் இடத்தைப் பிடிக்க உதவியது மட்டுமல்லாமல், 75,000 ரிங்கிட் ரொக்கப் பரிசையும் வென்றது.

ரோடா குழுவுடன் தான் இருந்தது நிகழ்ச்சியை மேலும் உற்சாகப்படுத்த மட்டுமே உதவியது என்றார் சத்தியா.

மேலும் பார்வையாளர்களிடமிருந்து அசாதாரண வரவேற்பைப் பெறுவேன் என்று தான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும் சத்தியா கூறினார்.

இந்த இறுதி நிகழ்ச்சியில் நான் ரோடா குழுவிற்கு உதவி செய்து கொண்டிருந்தேன்.

போட்டியை மேம்படுத்த அவர்கள் என்னை அழைத்தார்கள். அதனால் நான் ஏற்றுக்கொண்டேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset