செய்திகள் மலேசியா
முஸ்லிம் அல்லாதோரின் இறுதிச் சடங்குகளை அவரவர் வழக்கப்படி மேற்கொள்ள தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி: டத்தோஸ்ரீ எம். சரவணன்
கோலாலும்பூர்:
மே 12 முதல் ஜுன் 7 வரை, நடமாட்டக் கட்டுப்பாடு 3.0 காலகட்டத்தில், முஸ்லிம் அல்லாதோரின் இறுதிச் சடங்குகளை அவரவர் வழக்கப்படி மேற்கொள்ள தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி வழங்கியது.
இறுதிச் சடங்கில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய நடைமுறைகளையும், அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுப்பாடு விதிமுறைகளையும் அமைச்சு வெளியிட்டுள்ளது. ஒற்றுமை அமைச்சின் இந்தத் தகவலை மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் உறுதிப்படுத்தினார்.
இறுதிச் சடங்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடமாட்டக் கட்டுப்பாடு விதிமுறைகளை, ஒற்றுமை அமைச்சு விரிவாகக் குறிப்பிட்டிருந்தது. முஸ்லிம் அல்லாதோர் வீட்டில், வழிபாட்டுத்தலங்களில் மற்றும் தகனம் செய்யும் இடத்தில் அல்லது மயானத்தில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய நடைமுறைகள் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன.
வீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய நடைமுறைகள் :-
– சடலத்தைக் குளிப்பாட்டி, உடை அணிவித்துத் தயார் செய்ய 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
– இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவ; வீட்டின் அளவைப் பொறுத்து மாறுபடலாம்
– சடலத்தைத் தகனம் செய்ய அல்லது மயானத்திற்கு 20 பேருக்கு மேல் போகாத நெருங்கிய உறவினர்கள் மட்டுமே செல்ல முடியும்.
தகனம் செய்யும் இடத்தில் அல்லது மயானத்தில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய நடைமுறைகள் :-
– சடலத்தைத் தகனம் செய்ய அல்லது மயானத்திற்கு 20 பேருக்கு மேல் போகாத நெருங்கிய உறவினர்கள் மட்டுமே செல்ல முடியும்.
– ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் நடைபெறும் கருமக்கிரியை சடங்கில் நெருங்கிய உறவினர்கள் 5 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
“நடமாட்டக் கட்டுப்பாடு காலகட்டத்தில் அரசாங்கம் வழங்கியிருக்கும் இந்தச் சலுகையை முறையாக, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்பட்டு, நம்மை விட்டுப் பிரிந்து போன சொந்த பந்தங்களுக்கு உரிய இறுதி மரியாதையைச் செலுத்த வேண்டும்” என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
October 10, 2026, 1:35 pm
யாரும் கண்காணிக்காதபோதும் சரியானதைச் செய்வதே நேர்மை: டத்தோ வீரா ஷாகுல்
October 10, 2026, 10:13 am
சுங்கைபூலோவில் சந்தேக நபரைத் துரத்தியபோது போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்
October 10, 2026, 10:11 am
ஷாஆலத்தில் 11 வாகனங்கள் மீது மோதிய லோரி ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது பரிசோதனையில் உறுதி
October 10, 2026, 12:02 am
ONDRA RENDA -25 YEARS OF GVM இசைநிகழ்ச்சிக்காக 4,800 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
October 9, 2026, 9:12 pm
முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களைப் பராமரிக்க 80 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: பிரதமர்
October 9, 2026, 9:05 pm
பட்ஜெட் 2027; மித்ராவிற்கான ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும்: பிரதமர் அன்வார்
October 9, 2026, 4:31 pm
சாரா எஸ்டிஆர் உதவிக்கான ஒதுக்கீடு 1 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிப்பு: பிரதமர்
October 9, 2026, 4:30 pm
