
செய்திகள் கலைகள்
கொழுப்பை குறைக்கும் சிகிச்சையில் விபரீதம்: கன்னட நடிகை உயிரிழந்தார்
பெங்களூரு:
உடல் பருமனை குறைக்க கொழுப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால், கன்னட தொலைக்காட்சி நடிகை சேத்தனா ராஜ் உயிரிழந்தார்.
கன்னட தொலைக்காட்சிகளின் தொடர்களின் இளம் நடிகை சேத்தனா ராஜ் (21). தனது உடல் சற்று பருமனாக இருப்பதால் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருந்தியுள்ளார். பெங்களூரில் உள்ள தனியார் அழகு சிகிச்சை மையத்தை அணுகி உடல்பருமனை குறைக்க கொழுப்பை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
மயக்க மருந்து கொடுத்த பிறகு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது, சேத்தனா ராஜுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு சேத்தனா ராஜை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாரடைப்பால் சேத்தனா ராஜ் இறந்ததாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சேத்தனா ராஜின் தந்தை கே.வரதராஜ் கூறுகையில், "உடல்பருமனை குறைக்க ரூ.1 லட்சம் வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாக எனது மகள் தொந்தரவு செய்துகொண்டிருந்தார். எங்களுக்குத் தெரியாமல், நண்பர்களின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்ந்து அறுவைசிகிச்சை செய்ய முற்பட்டிருக்கிறார்.
"அறுவை சிகிச்சையின்போது மாரடைப்பால் எனது மகள் இறந்ததாக மருத்துவமனையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பசவேஸ்வராநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன்' என்றார்.
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 12:51 pm
ரசிகர்களின் மனதைக் கிரங்கடித்த HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசைநிகழ்ச்சி
July 3, 2025, 10:23 pm
முழங்காலிட்டு பத்திரிகையைப் பெற்று கொண்ட விஜய் சேதுபதி
July 2, 2025, 10:41 am
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த இதயக்கனி படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ்
June 29, 2025, 5:45 pm
பாதுகாப்பு காரணங்களுக்காக Mercedes Maybach GLS 600 புல்லட் புரூப் கார் வாங்கிய சல்மான்கான்
June 27, 2025, 8:37 pm
ஆமிர் கானின் தங்கல் படத் தடைக்கு தற்போது வருந்தும் பாகிஸ்தான்
June 26, 2025, 2:52 pm