செய்திகள் கலைகள்
“ஜன நாயகன்” திரைப்படத்தின் 3 ஆவது பாடலின் முன்னோட்டம் வெளியானது
சென்னை:
நடிகர் விஜய்யின் “ஜன நாயகன்” திரைப்படத்தின் 3 ஆவது பாடலின் முன்னோட்டம் (புரோமோ) வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள “ஜன நாயகன்” திரைப்படம், வரும் ஜன.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிவுள்ளது.
இந்தப் படத்தில், நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் மற்றும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகும் இந்தப் புதிய படத்தின் “தளபதி கச்சேரி”, “ஒரு பேரே வரலாறு” ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த நிலையில், ”ஜன நாயகன்” படத்தின் மூன்றாவது பாடலான “செல்ல மகளே” எனும் பாடல் வெள்ளிக்கிழமை (டிச. 26) மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் பாடியுள்ள இந்தப் பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
மேலும், “ஜனநாயகன்” திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் டிச.27 அன்று மலேசியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:21 am
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்
July 9, 2026, 2:38 pm
ரூ.70 கோடியைத் தாண்டிய ஆலியா பட்டின் ஆல்பா
July 7, 2026, 12:32 pm
பிரதீப் ரங்கநாதன் படத்தை இயக்கும் 6 இயக்குநர்கள்
July 2, 2026, 9:12 pm
இளையராஜாவின் காப்புரிமை வழக்கில் இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
June 30, 2026, 4:16 pm
பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாக இருந்த அனைவருக்கும் நன்றி: சாந்தனு பாக்கியராஜ்
June 27, 2026, 12:33 pm
நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்
June 24, 2026, 10:20 pm
பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் மம்முட்டி
June 24, 2026, 4:13 pm
ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தில் நடிகை ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்
June 22, 2026, 12:39 pm
