நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

60 வயதிற்குட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி விருப்பத்தேர்வு பதிவு நாளை நண்பகலில் திறக்கப்படுகிறது: கைரி ஜமாலுத்தீன்

கோலாலம்பூர்: 

60 வயதிற்குட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசிக்கான பதிவு, நாளை (மே 26) தொடங்கும் என்று கோவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழு (CIDF) இன்று அறிவித்துள்ளது.

அமைச்சர் கைரி ஜமாலுதீன் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, "தடுப்பூசிக்கான முன்பதிவை நாளை மதியம் 12 மணிக்கு செய்ய முடியும்" என்று கூறினார்.

'வயதானவர்களுக்கு தடுப்பூசிகளை போட முன்னுரிமை அளிக்கப்படும்' என்று அவர் வலியுறுத்தினார்.

“வயதானவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பதிவு செய்ய இன்னும் சில நாட்கள் அவகாசம் அளித்துள்ளோம்.

"இதனால், கிள்ளான் பள்ளத்தாக்கு, பினாங்கு, ஜொகூர் மற்றும் சரவாக் கூச்சிங் மற்றும் மிரி ஆகிய இடங்களில் அஸ்ட்ராஜெனெகா விருப்பத்தேர்வு செய்ய முடியும்.  இரண்டாம் கட்ட பதிவுக்காக நாளை 60 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்பதிவுகளை திறக்க சிஐடிஎஃப் முடிவு செய்துள்ளது," என்று அவர் கூறினார்.

"அஸ்ட்ராஜெனெகா விருப்பத் தடுப்பூசியின் இரண்டாம் கட்டத்திற்கு அனைத்து இடங்களும் விரைவாக நிரப்பப்படுவதை உறுதி செய்வதற்காகவே இந்த ஏற்பாடு" என்றும் அமைச்சர் கைரி தெரிவித்தார். 

"60 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு முதலில் பதிவு செய்ய இன்றும் நாளையும் நண்பகலுக்கு முன் திறப்போம். பின்னர் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு பதிவு செய்ய செயலியைத்  திறப்போம்," என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset