நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேமரன் மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்: 60 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துகுள்ளானது

பகாங்:

கேமரன் மலைப்பகுதியில் உள்ள போ தேயிலை மையம் அருகே, விளையாட்டு பயன்பாட்டினது வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 60 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது. இதனால் இருவர் காயமடைந்தனர்.

இந்த வாகனத்தில் ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் பயணம் செய்திருந்தனர். இந்த சம்பவத்தால் ஒரு ஆண், ஒரு பெண் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

தகவல் கிடைத்ததையடுத்து மலேசிய தீயணைப்பு மீட்புத் துறை கேமரன் ஹைலேண்ட்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

மீட்கப்பட்ட இருவரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset