நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கத்தியைக் கொண்டு தனது சகோதரனை கொலை செய்வதாக மிரட்டிய ஆடவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்

கோலாலம்பூர்: 

வேலை இல்லாத இளைஞர் ஒருவர், தனது சொந்த சகோதரனை கத்தியால் கொலை செய்ய மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு, இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார்.

25 வயதான கே. சரணியதேவன், கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி அதிகாலை, செத்தாப்பாக் பகுதியில் உள்ள குடியிருப்பில், தனது 22 வயது சகோதரனின் கழுத்தில் கத்தியை வைத்தபடி கொலை செய்வதாக மிரட்டிய குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார். குற்றச்சாட்டை மறுத்த அவர், தன்னை குற்றமற்றவர் என தெரிவித்தார்.

இவ்வழக்கு, குற்றவியல் சட்டத்தின் 506 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset