நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உயர்க்கல்விக்கூடங்களில் சேர்வதற்கு HIV சோதனை தேவை இல்லை

கோலாலம்பூர்:

உயர்க்கல்விக்கூடங்களில் சேரும் மாணவர்கள் HIV சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இருப்பினும், மாணவர்கள் பொதுவான உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ சம்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

“சில பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே HIV சோதனைகளை நடத்தியுள்ளன. மற்ற பல்கலைக்கழகங்களில் இதுவரை இச்சோதனை கட்டாயமாக்கப்படவில்லை. இருப்பினும், பல்கலைக்கழகச் சேர்க்கை காலத்தில் பொதுவான சோதனைப் பணி செய்யப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக செனட்டர் டாக்டர் வான் மார்டினா வான் யூசோஃப்பின் கேள்விக்கு பதிலளிக்கையில், உயர்க்கல்விக்கூட மாணவர்கள் HIV சோதனை செய்ய வேண்டியிருக்கும் என்று இல்லை, இது மாணவர்களில் குறுக்குவிளைவுகளைத்  தடுக்கும் முயற்சியாகும்.

HIV பரவலைத் தடுக்கும் அமைச்சின் நடவடிக்கைகளில் அறிவியல் செயலிகள், சுகாதாரம், மனநல ஆலோசனைப் பணிகளை அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset