நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாங்கி ரமலான் சந்தையில் அதிரடி சோதனை: 13 சட்டவிரோத குடியேறிகள் கைது

பாங்கி: 

பாங்கியில் உள்ள ரமலான் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட குடிவரவு துறை சோதனையில், இந்தோனேசியாவைச் சேர்ந்த 13 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று மாலை 3.55 மணியளவில் தொடங்கிய இந்த நடவடிக்கையில், மொத்தம் 720 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில், 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆறு ஆண்களும், ஏழு பெண்களும் குடிவரவு சட்டங்களை மீறியதாக கண்டறியப்பட்டனர்.

காலாவதியான அனுமதியுடன் நாட்டில் தொடர்ந்து தங்கியதற்காக, அவர்கள் குடிவரவு சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அனுமதியின்றி வியாபாரம் செய்வோர்கள் மீது எந்த வித தளர்வும் இல்லை என குடிவரவு துறை எச்சரித்துள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது விசாரணைக்காக குடிவரவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயல்கள் குறித்த தகவல்கள் இருந்தால், பொதுமக்கள் குடிவரவு துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset