செய்திகள் மலேசியா
சர்க்கரை, எண்ணெய் கடத்தல் முறியடிப்பு: KPDN அதிரடி வேட்டை
ரந்தாவ் பஞ்சாங்:
கடந்த ஞாற்றுக்கிழமை கம்போங் தாசேக் அருகிலுள்ள காடுகளில் 1.1 டன் சர்க்கரையையும் பேக்கெட் எண்ணெயையும் வைத்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் ஒருவரை அதிகாரிகள் 10 கிலோமீட்டர் வரை துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.
ப்ரோட்டான் வாஜா காரில் பயணம் செய்த அந்தச் சந்தேக நபர், மதியம் 1.02 மணியளவில் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று கண்டறியப்பட்டதாகக் கிளந்தான் மாநில உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவுத் துறையின் (KPDN) தலைமை அமலாக்க அதிகாரி அஸ்வாடி ஜாஃபார் தெரிவித்தார்.
"இந்த நடவடிக்கையை அறிந்த KPDN உறுப்பினர்களின் குழுவும், பெங்காலான் கூபோர் பிராந்திய மூன்று கடற்படையும் (PPM) உடனடியாக லூபோக் கோங்கிலிருந்து பாங்கோல் கூலிம் வரை காரைத் துரத்த நடவடிக்கை எடுத்தனர்," என்று கூறினார். பின்னர், கடத்துனர் காரை விட்டுவிட்டு பாங்கோல் குளிம் அருகிலுள்ள காடுகளில் ஓடினார்.
காரில் RM8000 மதிப்புள்ள 510 கிலோகிராம் பேக்கெட் எண்ணெயும் 648 கிலோகிராம் சர்க்கரையும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு 1961 உற்பத்தி கட்டுப்பாட்டு சட்டம் பிரிவு 21 கீழ் விசாரணை செய்யப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 5:40 pm
கேமரன் மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்: 60 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துகுள்ளானது
February 24, 2026, 5:39 pm
லாரி நிறுவனத்தைப் பாதுகாக்கும் மூன்று அமலாக்க அதிகாரிகள் உட்பட 12 பேர் கைது: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
February 24, 2026, 5:37 pm
உயர்க்கல்விக்கூடங்களில் சேர்வதற்கு HIV சோதனை தேவை இல்லை
February 24, 2026, 5:33 pm
அவசர பாதையில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழந்தார்
February 24, 2026, 5:27 pm
சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருக்கும் விபச்சார மையத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறையினர்: 23 பேர் கைது
February 24, 2026, 4:53 pm
பாங்கி ரமலான் சந்தையில் அதிரடி சோதனை: 13 சட்டவிரோத குடியேறிகள் கைது
February 24, 2026, 4:31 pm
கத்தியைக் கொண்டு தனது சகோதரனை கொலை செய்வதாக மிரட்டிய ஆடவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
