நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருக்கும் விபச்சார மையத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறையினர்: 23 பேர் கைது

கிள்ளான்:

கிள்ளான் பகுதியில் உள்ள பழைய கடை கட்டடங்களின் வரிசையில் செயல்பட்டு வந்த சட்டவிரோத வணிகத் தளம் மீது காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனை, 23 பேர் கைதாகினர்.

இன்று மதியம் 1.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், 18 பெண்கள், ஒரு பாதுகாவலர், நான்கு வாடிக்கையாளர்கள் பிடிபட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 29 வயதுடைய இந்தோனேசியப் பெண் ஒருவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்து, மாதம் 800 ரிங்கிட் வாடகைக்கு அறை எடுத்து, குறைந்த தொகைக்கு சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வந்ததாக ஒப்புக்கொண்டார். அவர் சமீபத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாகவும் தெரிவித்தார்.

சோதனையின்போது, சிறிய அறைகளாக மாற்றப்பட்ட அந்தக் கட்டிடங்கள் மிகுந்த அசுத்த நிலையிலும் துர்நாற்றத்துடனும் இருந்ததாகவும், தப்பிச் செல்ல இரகசிய வாயில்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.

இந்தச் சட்டவிரோத தளம் ஏற்கனவே ஒருமுறை சோதனைக்குட்பட்டிருந்தும், மீண்டும் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறை விரிவான அறிக்கையை பின்னர் வெளியிடவுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset