செய்திகள் மலேசியா
லாரி நிறுவனத்தைப் பாதுகாக்கும் மூன்று அமலாக்க அதிகாரிகள் உட்பட 12 பேர் கைது: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் லாரி உரிமையாளர்களைப் பாதுகாத்து ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று அதிகாரிகள் உட்பட 12 நபர்கள் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (SPRM) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையமும் சாலை போக்குவரத்து துறையும் (JPJ) இணைந்து இன்று கிள்ளான் பள்ளத்தாக்கு, நெகேரி செம்பிலான் பகுதிகளில் உள்ள வீடுகளையும் நிறுவனங்களையும் சோதனை செய்ததாக SPRM துணைத் தலைமை ஆணையர் (செயல்பாடுகள்), டத்தோஸ்ரீ அஹ்மத் குசைரி யஹாயா தெரிவித்துள்ளார்.
2023 முதல் நடந்து வரும் ஊழல், மத்தியஸ்தர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆவணங்கள் சேமிக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகத்தின் பேரில் அப் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
“அந்த 12 சந்தேக நபர்களும் காலை 5.30 மணி முதல் 7 மணி வரை 'Op Middleman' என்ற திட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதில் 9 சந்தேக நபர்கள் லஞ்சம் கொடுக்கும் முகவர்களாகவும் மத்தியஸ்தர்களாகவும் இருந்தவர்கள். அவர்களது லாரிகளைப் பாதுகாக்கவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் கோலாலம்பூர், சிலாங்கூர் JPJ அதிகாரிகளுக்கு மாதம் RM100 முதல் RM4,500 வரை லஞ்சம் கொடுத்தனர்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு MACC சட்டம் 2009 இன் 17(b) பிரிவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 5:40 pm
கேமரன் மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்: 60 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துகுள்ளானது
February 24, 2026, 5:37 pm
உயர்க்கல்விக்கூடங்களில் சேர்வதற்கு HIV சோதனை தேவை இல்லை
February 24, 2026, 5:36 pm
சர்க்கரை, எண்ணெய் கடத்தல் முறியடிப்பு: KPDN அதிரடி வேட்டை
February 24, 2026, 5:33 pm
அவசர பாதையில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழந்தார்
February 24, 2026, 5:27 pm
சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருக்கும் விபச்சார மையத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறையினர்: 23 பேர் கைது
February 24, 2026, 4:53 pm
பாங்கி ரமலான் சந்தையில் அதிரடி சோதனை: 13 சட்டவிரோத குடியேறிகள் கைது
February 24, 2026, 4:31 pm
கத்தியைக் கொண்டு தனது சகோதரனை கொலை செய்வதாக மிரட்டிய ஆடவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
