செய்திகள் மலேசியா
அவசர பாதையில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழந்தார்
தங்காக்:
வடற்கு-தெற்கு நெடுஞ்சாலையில் வடக்குப்புறத்தின் 107.1-ஆவது கிலோமீட்டரில் உள்ள அவசரப் பாதையில், போக்குவரத்து அதிகாரியை மோதிய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்துள்ளது.
"அவசர பாதையில் ஒரு நபரை சோதனை செய்து கொண்டிருந்த ஒரு போலீஸ் அதிகாரி மீது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று தங்காக் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ரோஸ்லான் முகமது தாலிப் தெரிவித்தார்.
"அந்தப் போலீஸ் அதிகாரி தங்காக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் (IPD) போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கப் பிரிவைச் சேர்ந்தவராவார்," என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மலாக்கா, ஜாசின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சுசுகி DL650XA மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அந்த 38 வயது உள்ளூர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், ஜாசின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் மட்டுமே சம்பந்தப்பட்டது என்றும், இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் (APJ) பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
சம்பவம் குறித்த தகவல் உள்ளவர்கள், விசாரணைக்கு உதவ, விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முஹம்மத் ஜமில் அஸ்வா அமீர் அஸ்வாவை 019-305834 என்ற என்னுக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 5:40 pm
கேமரன் மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்: 60 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துகுள்ளானது
February 24, 2026, 5:39 pm
லாரி நிறுவனத்தைப் பாதுகாக்கும் மூன்று அமலாக்க அதிகாரிகள் உட்பட 12 பேர் கைது: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
February 24, 2026, 5:37 pm
உயர்க்கல்விக்கூடங்களில் சேர்வதற்கு HIV சோதனை தேவை இல்லை
February 24, 2026, 5:36 pm
சர்க்கரை, எண்ணெய் கடத்தல் முறியடிப்பு: KPDN அதிரடி வேட்டை
February 24, 2026, 5:27 pm
சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருக்கும் விபச்சார மையத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறையினர்: 23 பேர் கைது
February 24, 2026, 4:53 pm
பாங்கி ரமலான் சந்தையில் அதிரடி சோதனை: 13 சட்டவிரோத குடியேறிகள் கைது
February 24, 2026, 4:31 pm
கத்தியைக் கொண்டு தனது சகோதரனை கொலை செய்வதாக மிரட்டிய ஆடவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
