செய்திகள் மலேசியா
ரயில் விபத்து: 166 பேர் காயம்; 47 பேர் படுகாயம்
கோலாலம்பூர்:
இரு எல்.ஆர்.டி. ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் குறைந்தபட்சம் 166 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் 46 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கே.எல்.சி.சி. ரயில் நிலையம் அருகே இன்றிரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பெர்னாமா செய்தி முகமை தெரிவித்துள்ளது.
ஒரு ரயிலில் 213 பயணிகள் இருந்ததாக டான்வாங்கி மாவட்டக் காவல்துறை தலைவர் உறுதி செய்துள்ளார். மற்றொரு ரயில் பயணிகளின்றி காலியாக இருந்ததை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா முன்னர் உறுதி செய்திருந்தார்.
மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்து ரயிலில் இருந்த மற்ற பயணிகளைப் பத்திரமாக வெளியேற்றினர்.
காயமடைந்த அனைவரும் உடனடியாக கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 3:07 pm
LRT இரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: 43 வயது வெளிநாட்டவர் கைது
August 24, 2026, 3:06 pm
பண்டமாரானில் உள்ள உணவகத்தில் ஆயுதங்களுடன் ரகளை: 5 பேர் கைது
August 24, 2026, 12:55 pm
சுபாங் ஜெயா கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: 10 பேர் காயம்
August 24, 2026, 11:45 am
இரும்பு கம்பியால் அண்டை வீட்டுக்காரரைத் தாக்கிய நபர்: 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 24, 2026, 11:26 am
ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தய விவகாரம்: 8 பேர் கைது
August 24, 2026, 10:55 am
செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் அதிகாலையில் தீ விபத்து: ஓர் ஆடவர் பாதிக்கப்பட்டார்
August 24, 2026, 10:27 am
