செய்திகள் மலேசியா
ஆபரேஷன் செலாமட்: 10 நாட்களில் 338,269 சம்மன்கள்
கோலாலம்பூர்:
பத்து நாள்கள் நீடித்த ஆபரேஷன் செலாமட் 18 நடவடிக்கையின்போது நாடு முழுவதும் உள்ள வாகனமோட்டிகளுக்கு 338,269 சம்மன்கள் அளிக்கப்பட்டன.
நோன்புப் பெருநாளையொட்டி சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஏராளமானோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு 223,449 பேருக்கு சம்மன்கள் அளிக்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 51 விழுக்காடு அதிகரித்துள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை மீறியதற்காக 240,421 பேருக்கும், போக்குவரத்து சிக்னலை பொருட்படுத்தாத 4,375 பேருக்கும், வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்திய 1,991 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒட்டுமொத்த விபத்துகளின் எண்ணிக்கை இந்தாண்டு ஒரு விழுக்காடு அதிகரித்துள்ளது.
2019ஆம் ஆண்டு 15,836 வழக்குகள் பதிவான நிலையில், நடப்பாண்டு அந்த எண்ணிக்கை 15,947 ஆக உள்ளது.
கொரோனா விவகாரம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருநாள் வேளையில் போக்குவரத்து மீறல்கள் அதிகம் பதிவாகவில்லை.
விபத்துச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் 65 விழுக்காட்டினர், அதாவது 108 பேர் இருசக்கர வாகனமோட்டிகள் ஆவர்.
விதிமீறல்களுக்காக 32,136 இருசக்கர வாகனமோட்டிகளுக்கு சம்மன் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 9:24 pm
நாளை முதல் டீசலின் விலை 85 சென் குறைகிறது
April 22, 2026, 5:49 pm
மலாக்கா நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு வரி விதிப்பது குறித்து இந்தோனேசியா பரிசீலித்து வருகிறது
April 22, 2026, 5:44 pm
தகவல்கள் இன்னும் முழுமையடையாததால் ஆர்எஸ்-1 அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை: அமிரூடின் ஷாரி
April 22, 2026, 5:43 pm
டான்ஶ்ரீ இசா சமத்தின் மறு ஆய்வு மனு: மே 13ஆம் தேதி விசாரிக்கப்படும்
April 22, 2026, 5:32 pm
திரெங்கானுவில் போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை: அரசு ஊழியர் உட்பட 146 பேர் அதிரடி கைது
April 22, 2026, 3:49 pm
