செய்திகள் மலேசியா
பத்துமலை தைப்பூச விழாவின் போது ஆற்றங்கரையில் சுத்தத்தை பாதுகாப்பது பக்தர்களின் கடமையாகும்: டான்ஸ்ரீ நடராஜா
கோலாலம்பூர்:
பத்துமலை தைப்பூச விழாவின் போது ஆற்றங்கரையில் சுத்தத்தை பாதுகாப்பது பக்தர்களின் கடமையாகும்.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.
தைப்பூச விழா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்பட்டாலும் பத்துமலையில் பக்தர்கள் முன்கூட்டியே நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இதனால் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக தேவஸ்தானம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆற்றங்கரையில் கட்டம் கட்டமாக சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக இன்று பத்துமலை ஆற்றங்கரை வளாகத்தில் தார் சாலை போடப்பட்டது.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தை சேர்ந்த பிரபல குத்தகையாளர் விவேக் தலைமையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது ஆற்றங்கரை மிகவும் சுத்தமாகவும் பக்தர்களுக்காகவும் தயார் நிலையில் உள்ளது.
இனி ஆற்றங்கரையை சுத்தமாக பாதுகாத்துக் கொள்வது பக்தர்களின் பொறுப்பாகும்.
குறிப்பாக குப்பைகளை குப்பை தொட்டியில் போடுங்கள். இது தான் முக்கியம் என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 22, 2026, 4:51 pm
பண மோசடியால் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு நீதி கோரி பேங்க் நெகாராவில் மகஜர் வழங்கப்பட்டது: டத்தோ கலைவாணர்
January 22, 2026, 12:59 pm
தொடக்கப்பள்ளியில் பகடிவதையா?: ஒன்றாம் ஆண்டு மாணவன் தாக்கப்பட வழக்கில் போலீஸ் விசாரணையை தொடங்கியது
January 22, 2026, 12:11 pm
பங்சார் தமிழ்ப்பள்ளிக்கு 100 மடிக்கணினிகள்; இந்திய சமுதாயத்திற்கு கல்வியே சிறந்த முதலீடு: ஃபஹ்மி
January 22, 2026, 11:33 am
RM2.12 மில்லியன் லஞ்ச வழக்கு: முன்னாள் இராணுவத் தளபதி தாம் லஞ்சம் பெறவில்லை என்று வாதம்
January 22, 2026, 11:24 am
மலேசியாவில் மனிதக் கடத்தல் கும்பல்: இருவர் கைது
January 22, 2026, 9:41 am
வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ் இணையக் கல்விக்கழக திட்டம்
January 22, 2026, 8:36 am
