நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பங்சார் தமிழ்ப்பள்ளிக்கு 100 மடிக்கணினிகள்; இந்திய சமுதாயத்திற்கு கல்வியே சிறந்த முதலீடு: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

இந்திய சமுதாயத்திற்கு கல்வியே மிகச் சிறந்த முதலீடு என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

தகவல் தொடர்பு அமைச்சரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபஹ்மி ஃபட்சில் இன்று காலை பங்சார் தமிழ்ப் பள்ளிக்கு சிறப்பு வருகை தந்தார்.

பங்சார் தமிழ்ப் பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் டத்தோ சங்குபிள்ளை அமைச்சருக்கு  பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

பங்சார் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவி, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் லீலாவதி உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு ஆரம்ப தொகையாக 150 வெள்ளி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் அறிவித்தார்.

அந்த வகையில் பங்சார் தமிழ்ப் பள்ளியில் பயிலும் 60 மாணவர்களுக்கு 8,850 வெள்ளி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், பங்சார் தமிழ்ப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை நூறாக உயர்த்தப்பட வேண்டும்.

குறைந்த மாணவர்களை கொண்ட பள்ளியாக பங்சார் தமிழ்ப் பள்ளி இருக்கக்கூடாது.

மேலும் பங்சார் தமிழ்ப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க 100 மடிக்கணினிகளை வழங்கப்படும்.

அதே வேளையில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு 10,000 ரிங்கிட்டும், திறந்த வெளி மண்டபத்திற்கு தரமான கூரையை மாற்றி கொடுக்கப்படும்.

எனது நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பங்சார் தமிழ்ப் பள்ளிக்கு அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக அவர் பலத்த கரவொலிக்கிடையே அறிவிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset