நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா இன்னும் தேமுவில் தான் உள்ளது; வெளியேறுவதாகக் கூறப்படுவது வெறும் ஊகம் மட்டுமே: ஸம்ரி

கோத்தா கினபாலு:

மஇகா இன்னும் தேசிய முன்னணியில்தான் உள்ளது. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகக் கூறப்படுவது வெறும் ஊகம் மட்டுமே.

அக்கூட்டணியின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ  ஸம்ரி அப்துல் காடிர் இதனை கூறினார்.

மஇகா தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் என்று இதுவரை தனது கட்சிக்கு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

கூறு கட்சிகளின் உயர் தலைமைக்கு இடையிலான உறவு அப்படியே உள்ளது.

குறிப்பாக நல்ல நிலையில் உள்ளது என்று அவர் கூறினார்.

மஇகா தொடர்ந்து தேசிய முன்னணி உடன்தான் பயணிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இது தொடர்பாக எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் எழவில்லை. மேலும் அது தேசிய முன்னணி கூட்டத்தில் விவாதிக்கப்படவே இல்லை.

இதுவரை எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் வெளியேறுகிறார்களா இல்லையா என்று கூறும் எந்த அறிக்கையும் இல்லை.

அதை நாங்கள் ஓர் உண்மையான ஆதாரமாக எடுத்துக் கொள்ளவில்லை.

கோத்தா கினபாலுவில் நடைபெற்ற தேசிய முன்னணி உச்சமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset