செய்திகள் மலேசியா
வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ் இணையக் கல்விக்கழக திட்டம்
கோலாலம்பூர்:
வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ் இணையக் கல்விக்கழக (Tamil Virtual Academy) திட்டத்தை மலேசிய மாணவர்களிடையே கொண்டு செல்லும் நோக்கில், Global Indian International School (GIIS) மலேசிய வளாகத்தின் இயக்குநர் மனோஜ் நாயர் (Mr. Manoj Nair) அவர்களை சந்தித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில், NRTIA மலேசியா அமைப்பின் தலைவர் பிர்தோஸ் கான் (Firdous Khan), செயலாளர் ஜான் ரீகன் (John Reagan) ஆகியோர் கலந்துகொண்டு, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பாடத்திட்டங்கள், அதன் மூலம் மாணவர்களும் ஆசிரியர்களும் அடையக்கூடிய நன்மைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.
இணையவழியில் தமிழ் மொழியைக் கற்கவும், அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் பெறவும் இந்தத் திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
இறுதியாக மனோஜ் நாயர் பேசுகையில், இந்த உயர்ந்த கலாச்சார வளத்தை GIIS அமைப்பில் ஒருங்கிணைப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
பள்ளியின் நோக்கமான விரிவான, உள்ளடக்கிய கல்வி முறைக்கு இது மிகப்பொருத்தமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 22, 2026, 8:36 am
மஇகா இன்னும் தேமுவில் தான் உள்ளது; வெளியேறுவதாகக் கூறப்படுவது வெறும் ஊகம் மட்டுமே: ஸம்ரி
January 21, 2026, 10:59 pm
தைப்பூச தினத்தை பொது விடுமுறையாக கெடா மாநில அரசு அறிவிக்க வேண்டும்: டான்ஸ்ரீ நடராஜா வலியுறுத்து
January 21, 2026, 4:05 pm
தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு உதவி நிதி: பிரதமர் வழங்குகிறார்
January 21, 2026, 3:34 pm
ஆறு வயதில் முதலாம் வகுப்பு திட்டத்தை அமல்படுத்த பள்ளிகளும் ஆசிரியர்களும் தயார்: ஃபட்லினா
January 21, 2026, 3:20 pm
நுரையீரல் தொற்று காரணமாக வீ கா சியோங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
January 21, 2026, 1:25 pm
