நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முக்மீன் - மிம்காய்ன் சர்வதேச வர்த்தகர்கள் மாநாடு: வெளி நாட்டுப் பேராளர்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

சிப்பாங்:

முக்மீன் -  மிம்காய்ன் சர்வதேச வர்த்தகர்கள் மாநாடு நாளை கோலாலம்பூரில் தொடங்க இருக்கிறது. வெளி நாட்டுப் பேராளர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து வரத் தொடங்கி இருக்கிறார்கள்.

அவர்களுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு நல்க மாநாட்டு சேவையாளர்கள் விமான நிலையத்தில் பதாகைகளைப் பிடித்து வரவேற்று வருகின்றார்கள். 

நாளை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பதிவு செய்தவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைக் கையேடும் நுழைவுக்கான அடையாள அட்டை (டேக்) வழங்கப்படும் என்று ஏற்பாட்டுக் குழுவை நிர்வகித்து வரும் டத்தோ ஸ்ரீ அக்மல் கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset