நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொடக்கப்பள்ளியில் பகடிவதையா?: ஒன்றாம் ஆண்டு மாணவன் தாக்கப்பட வழக்கில் போலீஸ் விசாரணையை தொடங்கியது

அம்பாங் ஜெயா:

மெதுவாக நடந்ததாகக் கூறி, ஒரு தொடக்கப்பள்ளியில் உள்ள ஒன்றாம் ஆண்டு மாணவன் தாக்கப்பட்டு காயமடைந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய காணொலி தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

அம்பாங் ஜெயா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி ஆணையர் கைருல் அனுவார் காலித் கூறுகையில், அந்த காணொலி நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் சமூக ஊடகங்களில் கவனத்திற்கு வந்ததாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் பிற்பகல் 3.06 மணியளவில் ஒரு நபர் போலீஸ் புகார் அளித்துள்ளார்.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், இந்த வழக்கு குற்றச் சட்டம் பிரிவு 323-இன் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஒரு ஆண்டு சிறை அல்லது RM2,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

முன்னதாக, கழிவறைக்கு செல்லும் போது மெதுவாக நடந்ததால், வகுப்புத் தோழர் ஒருவர் முகத்தில் அறைந்ததாக அந்த மாணவனின் தந்தை சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார். இந்த சம்பவத்தில் குழந்தையின் முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset