நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பண மோசடியால் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு நீதி கோரி பேங்க் நெகாராவில் மகஜர் வழங்கப்பட்டது: டத்தோ கலைவாணர்

கோலாலம்பூர்:

பண மோசடியால் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு நீதி கோரி பேங்க் நெகாராவில் இன்று மகஜர் வழங்கப்பட்டது.

நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் கூறினார்.

அவசர பண உதவிக்காக இணையத்தில் தெரியாதவர்களை நம்பி நமது மக்கள் மோசடியில் சிக்கி தவிக்கின்றனர்.
குறிப்பாக அவர்களுக்கு வங்கியில் புதிய கணக்குகள் திறக்க முடியாமல் போகிறது.

இது அவர்களுக்கு வேலை கிடைக்காத சூழ்நிலையை கூட ஏற்படுத்துகிறது.

இதன் அடிப்படையில் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி நோக்கில் முதல் முறையாக பேங்க் நெகாரா அதிகாரிகளை சந்தித்து மகஜர் வழங்கப்பட்டது.

இந்த முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 40 பேருக்கு நீதி கிடைக்க கோரி இன்று மகஜர் வழங்கப்பட்டது.

மகஜர் வழங்கியதுடன் இங்குள்ள அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்துள்ளது.

குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்காக பேங்க் நெகாரா ஒப்புக் கொண்டுள்ளது.

இருந்தாலும் மக்கள் யாரையும் நம்பி வங்கி கணக்குகளையும் ஏடிஎம் அட்டைகளையும் கொடுக்கக் கூடாது.

இது வாழ்க்கையை சீரழிக்கும் வகையில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.

ஆகவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என டத்தோ கலைவாணர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset