நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

RM2.12 மில்லியன் லஞ்ச வழக்கு: முன்னாள் இராணுவத் தளபதி தாம் லஞ்சம் பெறவில்லை என்று வாதம் 

கோலாலும்பூர்:

முன்னாள் மலேசிய இராணுவ அதிகாரி (PTD) டான் ஸ்ரீ முஹம்மது ஹபிசுதீன் ஜந்தான், 2.12 மில்லியனுக்கும் அதிகமான லஞ்சம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். 

நீதிபதி அஸூரா அல்வி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதும், அவர் தாம் குற்றமற்றவர் என தெரிவித்தார்.

58 வயதான முஹம்மது ஹஃபிசுத்தீன், சட்டவிரோத செயல்பாடுகளின் வருவாயாகக் கருதப்படும் RM969,000; RM474,850; RM488,550;  RM190,000 ஆகிய தொகைகளைத் தமது மூன்று வங்கி கணக்குகளில் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பண மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் தொகையின் ஐந்து மடங்கு அல்லது RM5 மில்லியன் அபராதமும் விதிக்கப்படலாம்.

- சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset