செய்திகள் உலகம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் காலமானார்
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று (மே 13 வெள்ளிக்கிழமை) காலமானார் என்று அதிபர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்காக ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உட்பட அனைத்து வளைகுடா நாடுகளும் இதர முஸ்லிம் நாடுகளும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளன.
ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் 2004 நவம்பர் 3 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் பணியாற்றி வந்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் அதிபராக பணியாற்றிய அவரது தந்தை மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் 1971 இல் அமீரகத்தின் சுல்தானாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு அவரது தந்தையின் மறைவுக்கு பிறகு ஷேக் கலீஃபா பின் சயீத் அதிபரானார்.
1948 ஆம் ஆண்டு பிறந்த ஷேக் கலீஃபா ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது அதிபராகவும், அபுதாபி அமீரகத்தின் 16வது ஆட்சியாளராகவும் இருந்தார்.
இவர் ஷேக் சயீத்தின் மூத்த மகன் ஆவார்.
தொடர்புடைய செய்திகள்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்
November 27, 2025, 7:15 am
இந்தோனேசியாவில் நிலச்சரிவு, கடும் வெள்ளம்: 16 பேர் பலி
November 26, 2025, 7:24 am
1MDB மோசடி: Standard Chartered வங்கிக்கு எதிராக $3.52 பில்லியன் வழக்கு
November 25, 2025, 3:12 pm
சிங்கப்பூரில் குறுந்தகவல் மோசடி: தடுக்க Apple, Google நிறுவனங்களுக்கு உத்தரவு
November 24, 2025, 7:17 pm
மீண்டும் இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்
November 21, 2025, 9:33 pm
