நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் பொருள்களின் விலை 5% உயர்கிறது

புது டெல்லி:

டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக மின்சாதனப் பொருள்களின் விலை ஜூன் முதல் வாரத்தில் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை உயரும் என்று அதன் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளதால் இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களின் விலை உயர்ந்துள்ளதும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பால் சீனாவின் ஷாங்காயில் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால் அந்த துறைமுகத்தில் உதிரி பாகங்கள் ஏற்றி வரும் கன்டெய்னர்கள் தேங்கி நிற்கின்றன.

இதையடுத்து உதிரி பாகங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு அவற்றின் விலை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மின்சாதனப் பொருள்கள் பெரும்பாலான இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்களைக் கொண்ட தயாரிக்கப்படுவதால் இந்த விலை உயர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற காரணங்களால் ஜூன் மாதம் முதல் வீட்டு உபயோக பொருள்களின் விலை 5 சதவீதம் வரை உயரும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset