செய்திகள் மலேசியா
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப் அமெரிக்க அதிபரை சந்தித்தார்
வாஷிங்டன்:
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசியுள்ளார்.
இவ்விரு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புக் கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
அமெரிக்க - ஆசிய நாடுகளுக்கான உச்ச நிலை மாநாடு வாஷிங்டனில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப் அமெரிக்கா சென்றிருந்தார்.
புரூணை, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா உட்பட ஆசிய நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டிற்காக அமெரிக்கா வந்துள்ளனர்.
இம்மாநாட்டிற்கு முன் அதிபர் ஜோன் பைடன் ஆசிய தலைவர்களை வரவேற்றார்.
அப்போது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப், அதிபர் ஜோ பைடலை சந்தித்து பேசினார்.
அதன் பின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்துபசரிப்பிலும் பிரதமர் கலந்து கொண்டார்.
கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் பாராக் ஓபாமா ஆசிய தலைவர்களை அழைத்து மாநாட்டை நடத்தினார்.
அதன் பின் மீண்டும் அதுபோன்ற மாநாடு அமெரிக்காவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
October 4, 2026, 3:47 pm
தனித்து போட்டியிடும் தேசிய முன்னணியின் முடிவை மஇகா முழுமையாக வரவேற்கிறது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 4, 2026, 3:28 pm
நஜிப் மன்னிப்பு விவகாரத்தில் அந்தோணி லோக் அல்ல; ஜசெகவே வெளியேற வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 4, 2026, 11:40 am
மலாக்கா மாநில தேர்தல்: 4 தொகுதிகளில் போட்டியிட பாஸ் கட்சிக்கு வாய்ப்பு?
October 4, 2026, 10:08 am
