நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விதிமீறல்கள் காரணமாக 10,000க்கும் மேற்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன: எம்சிஎம்சி

சைபர்ஜெயா:

விதிமீறல்கள் காரணமாக 10,000க்கும் மேற்பட்ட  உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

எம்சிஎம்சி இதனை ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

சிலாங்கூரில் உள்ள கிள்ளான்,  பெட்டாலிங் ஜெயாவில் ஓப் ஒப்திக் கீழ் எம்சிஎம்சி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இச்சோதனையில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 10,112 சந்தேகத்திற்குரிய விதிமீறல் கொண்ட தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மலேசிய தரநிலைகள், தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் (சிரிம்) இடையிலான ஒத்துழைப்பின் விளைவாக உளவுத்துறை தகவல்களைத் தொடர்ந்து, 

நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய 19 மணி நேர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்களில் வயர்லெஸ் மூடிய-சுற்று கேமராக்கள், கணினிகள், அச்சுப்பொறிகள், கைத்தொலைபேசிகள்,  வைஃபை ரவுட்டர்கள் போன்ற பல வளாக செயல்பாட்டு ஆதரவு உபகரணங்கள் அடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset