நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இளைஞர் பிரிவின் அழுத்தம் இருந்தபோதிலும், அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தின் கூரையை உடைக்காது: ஜாஹித்

கோலாலம்பூர்:

இளைஞர் பிரிவின் அழுத்தம் இருந்த போதிலும்,  அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தின் கூரையை உடைக்காது.

துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்து அம்னோ,  தேசிய முன்னணி ஆகியவை தொடர்ந்து அரசாங்கத்தில் இருக்கும்.

2022 டிசம்பரில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பு நம்பிக்கை கூட்டணியுடனான ஒத்துழைப்பு  இதுதான்.

நேற்று நடைபெற்ற அரசியல் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களில், 

கடந்த சனிக்கிழமை அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முகமது அக்மால் சாலே அம்னோ ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியாக மாற வேண்டும் என்ற முன்மொழிவும் அடங்கும்.

ஆனால் தொடர்பாக கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று டத்தோஸ்ரீ ஜாஹிட் கூறினார்.

ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு நிலைப்பாடு உள்ளது. அம்னோ ஆரம்பத்திலிருந்தே தற்போதைய அரசாங்கத்தின் கூரையைத் துளைக்க மாட்டோம் என்ற நிலைப்பாடு உள்ளது.

இந்த ஒற்றுமை அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை நாங்கள் அதனுடன் ஒன்றாக இருப்போம்

16ஆவது பொதுத் தேர்தல் நடைபெறும் வரை இது நீடிக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset