நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இராணுவ வீரர்கள் நேர்மை, நம்பிக்கையை நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்: மாமன்னர்

கோலாலம்பூர்:

இராணுவ வீரர்கள் நேர்மை, நம்பிக்கையை நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

மாமன்னரை ராணுவத் தளபதி சந்தித்த போது,

ராணுவ வீரர்கள் நேர்மை, நம்பிக்கை, அவர்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய உறுதியான ஆலோசனையை மாமன்னர் வழங்கினார்.
தேசிய பாதுகாப்புப் படைகளின் வலிமை, நம்பகத்தன்மைக்கு ஊழல் முக்கிய எதிரி என்றும், எந்தவொரு அதிகார துஷ்பிரயோகம் அல்லது முறைகேடும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.

மலேசிய ஆயுதப் படைகளின் உச்ச தளபதியாக, நேர்மையுடன் கூடிய தலைமை மிக உயர்ந்த மட்டத்திலிருந்து தொடங்குகிறது.

மேலும் தூய்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை வளர்ப்பதில் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் மாமன்னர் நினைவுபடுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset