நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் டாக்டர் மகாதீரின் இடுப்பு எலும்பு முறிந்தது: சிகிச்சை பல வாரங்கள் நீடிக்கும்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மதுவின் வலது இடுப்பு எலும்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால் அவருக்கு பல வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும்.

மருத்துவ சோதனைகளுக்கு பிறகு மகாதீரின் உடல்நிலை உறுதி செய்யப்பட்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் சூஃபி யூசாப் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தார்.

மருத்துவ மதிப்பீட்டைத் தொடர்ந்து, மகாதீரின் வலது இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிகிச்சை, கண்காணிப்புக்காக துன் மகாதீர் அடுத்த சில வாரங்களுக்கு மருத்துவமனையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சூஃபி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset