நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் அமான் JSPT இயக்குநர் உட்பட காவல் துறை மூத்த அதிகாரிகள் பணியிட மாற்றம்

பெட்டாலிங் ஜெயா

புக்கிட் அமான், சராவாக் மாநிலத்தில் உள்ள முக்கியப் பதவிகளுக்காகப் பல மூத்த காவல் அதிகாரிகளின் பணியிட மாற்றம், புதிய நியமனங்கள் 9 பிப்ரவரி முதல் அமலுக்கு வரும் என காவல் துறை இன்று அறிவித்தது.

புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறை (JSPT) இயக்குநர் யூஸ்ரி ஹசன் பஸ்ரி, புக்கிட் அமான் குற்றத் தடுப்பு, சமூக பாதுகாப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என காவல் துறைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் காசிம் கூறினார்.

தற்போது புக்கிட் அமான் குற்றத் தடுப்பு, சமூக பாதுகாப்புத் துறை இயக்குநராக  வான் ஹசன் வான் அஹ்மத் பதவி வகிக்கின்றார். வான் ஹசன், இன்ஸ்பெக்டர்-ஜெனரல் ஆஃப் போலீஸ் (IGP) செயலக அலுவலகத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டு (Research and Development) செயலகத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

IGP செயலகத்தின் பணமோசடி தடுப்பு குற்றவியல் விசாரணைக் குழுவின் தலைவரான ஹஸ்புல்லா அலி யூஸ்ரிக்குப் பதிலாகப் புதிய புக்கிட் அமான் JSPT இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சிபு மாவட்ட தலைமை காவல் அதிகாரி,  ஸுல்கிப்லி சுஹைலி, சராவாக் மாநில காவல் துறையின் மேலாண்மைத் துறையின் தலைவராக, இடைக்கால மூத்த உதவி ஆணையர் (SAC) பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

“சராவாக் மாநில காவல் துறையின் நேர்மை, தரநிலை இணக்கம் துறையின் தலைவர் ரோசெலினா டாவுட், மாநில குற்றத் தடுப்பு, சமூக பாதுகாப்புத் துறையின் புதிய தலைவராக, இடைக்கால SAC பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

“மூவார் நகரில் உள்ள காவல் தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திர பொறியியல் கல்வி மையத் தலைவர் பொஸ்லான் இப்ராஹிம், புக்கிட் அமான் நேர்மை, தரநிலை இணக்கம் துறையின் மத மற்றும் ஆலோசனைப் பிரிவில் (Religion and Counselling) முதன்மை துணை இயக்குநராக, இடைக்கால SAC பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்,” என்று அவர் கூறினார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset