நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்துவில் இருந்து சைபுடின் அப்துல்லாஹ் நீக்கப்பட்டார்

கோலாலம்பூர்:

பெர்சாத்து அதன் உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லாஹ்வை இன்று முதல் பதவி நீக்கம் செய்துள்ளது.

பெர்சத்து ஒழுங்கு நடவடிக்கை வாரியத்தால் இன்று தேதியிடப்பட்டு சைபுடினுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின்படி, நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அந்தக் கடிதத்தில் சைபுடின் கட்சி அரசியலமைப்பின் பிரிவு 9.1.4 ஐ மீறியதாகக் கூறப்பட்டது.

ஆனால் இந்திரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர் செய்த குறிப்பிட்ட குற்றத்தை அக்கடிதத்தில் விவரிக்கவில்லை.

இதனிடையே தாம்  நீக்கப்பட்டதை சைபுடின் உறுதிப்படுத்தினார்.

மேலும் அந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset