நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளி ரத ஊர்வலத்திற்கான முன்னேற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை: 

பத்துமலை தைப்பூச விழாவில் வெள்ளி ரத ஊர்வலத்திற்கான முன்னேற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.

உலகமெங்கும் தைப்பூச விழா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

மலேசியாவில் தாய்க் கோவிலான பத்துமலையில் இவ்விழாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

தொடர்ச்சியாக பொது விடுமுறை என்பதால் இவ்வாண்டு பத்துமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தை நோக்கி வெள்ளி ரதம் வரும் ஜனவரி 30ஆம் தேதி புறப்படவுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக பல முன்னேற்பாடுகளை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக ரதம் ஊர்வலமாக செல்லும் சாலைகளில் மரங்கள் வெட்டி சீராக்கப்படுகிறது.

வெள்ளி ரத ஊர்வலம் எந்தவொரு தடங்களும் இல்லாமலும் பக்தர்களின் பாதுகாப்பு, வசதிகளை அடிப்படையாக கொண்டு இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று டான்ஸ்ரீ நடாராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset