
செய்திகள் இந்தியா
தாஜ்மஹால் அறைகளை திறக்கக் கோரி வழக்கு தொடர்ந்த பாஜக: தள்ளுபடி செய்த நீதிமன்றம்
லக்னோ:
தாஜ்மஹாலில் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளை திறந்து பார்க்க உத்தரவிடக் கோரிய பாஜகவின் மனுவை அலஹாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை நிராகரித்துள்ளது.
முகலாய அரசர்களில் ஒருவரான ஷாஜஹான் ஆறாம் நூற்றாண்டில், பளிங்குக்கற்களால் கட்டியது தாஜ்மகால். உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ் மஹால் உள்ளது. தாஜ் மஹாலைப் பார்க்க உலகெங்குமிருந்து சுற்றுப் பயணிகள் இந்தியாவிற்கு வருகிறார்கள். அதன் மூலம் கணிசமான அந்நிய செலாவணியை இந்தியா ஈட்டி வருகிறது.
தாஜ்மஹாலை நம்பி பல ஆயிரம் பேர் சுற்றுலாத்துறை மூலம் சம்பாதித்து வருகிறார்கள்.
தற்போது பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள இதைக் கட்ட அங்கிருந்த தேஜோலாயா எனும் சிவன் கோயில் இடிக்கப்பட்டதாக பாஜக நிர்வாகி ஒருவர் புதுக் கதையுடன் புகார் கூறி வழக்கு தொடர்ந்தார்.
இக் கோயிலின் சிலைகள், தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில், இருப்பதாகவும் வழக்கில் சந்தேகம் எழுப்பப்பட்டது.
தாஜ்மகாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளை திறந்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை பாஜக இளைஞர் அணி ஊடக பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங் தாக்கல் செய்திருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது நீதிமன்றம். அதனை கொண்டாடும் வகையில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர் பாஜக ஆதரவாளர்கள். இதனை வரவேற்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) லக்னோ கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "உண்மை, எதுவாக இருந்தாலும் இந்த பிரச்சினைகள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் செய்ய வேண்டிய பணி. நீதிமன்ற நேரத்தை வீணாக்கக் கூடாது" என நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. அதோடு இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 4:14 pm
ரயிலில் கர்ப்பிணிக்கு வலி: வீடியோ காலில் ஆலோசனை சொன்ன மருத்துவர்
October 17, 2025, 3:45 pm
ரூ. 5 கோடி ரொக்கம், ஆடம்பர கார்கள், 1.5 கிலோ தங்கம் பறிமுதல்: ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டிஐஜி கைது
October 16, 2025, 11:44 am
அயோத்தியில் ரூ 200 கோடி ஊழல்
October 16, 2025, 10:47 am
டெல்லியில் அரசு சார்பில் வாடகை கார் சேவை
October 16, 2025, 7:37 am
டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
October 15, 2025, 10:17 pm
ஹரியாணாவில் அடுத்தடுத்து சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் காவல் அதிகாரிகள்
October 15, 2025, 9:33 pm
ராஜஸ்தானில் பேருந்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am