நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விசாக தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் - மலேசியா எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்

சிங்கப்பூர்:

எதிர்வரும் விசாக தின விடுமுறையுடன் சேர்ந்த நீண்ட வாரயிறுதியில் துவாஸ், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிகளில் அதிகப் போக்குவரத்து நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசியா, சிங்கப்பூர் போக்குவரத்து, குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.  

நாளை வெள்ளிக்கிழமையும் (மே 13), சனிக்கிழமையும் (மே 14) சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குள் நுழையும் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் அதிகம்  இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Singapore-Malaysia Border Targeted To Reopen On 10 Aug, Not For Leisure  Travel Yet

அதைப் போலவே ஞாயிற்றுக்கிழமையும் (மே 15) அடுத்த திங்கட்கிழமையும் (மே 16) சிங்கப்பூருக்கு வரும் வழியில்  போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். 

தரைவழிப் பாதைகளின் மூலம் செல்லவிருப்போர் பயணத்தின்போது தாமதத்தை எதிர்நோக்க வேண்டிவரலாம். 

பயணிகள், தங்கள் பயணத் திட்டத்தைச் சரிவர வகுத்துக்கொண்டு, போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று இரு நாட்டு (மலேசியா, சிங்கப்பூர்) போக்குவரத்து அதிகாரிகளும் கேட்டுக் கொண்டுள்ளனர் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset