நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்: 153 மருத்துவக் கட்டமைப்புகள் சிதைவு

தெஹ்ரான்: 

அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களினால், ஈரான் நாட்டில் மொத்தம் 153 மருத்துவ, சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதில் 56 விரிவான சுகாதார சேவை மையங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 25 சுகாதார நிலையங்கள், 18 நகர்ப்புற மையங்கள், 18 சமூக கிளினிக்குகள் உள்ளிட்ட பல கட்டமைப்புகள் இந்தத் தாக்குதலில் சிதைந்துள்ளதாக மெஹ்ர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் மையங்களைப் பொறுத்தவரை, கெர்மான்ஷா மருத்துவப் பல்கலைக்கழகம் மிக அதிகப்படியான இழப்புகளைச் சந்தித்துள்ளது; அங்கு மட்டும் 42 மையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக அமைந்துள்ள அஹ்வாஸ், உருமியா, தெஹ்ரான், ஷிராஸ், லொரெஸ்தான் உள்ளிட்ட மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட ஏராளமான மருத்துவக் கட்டமைப்புகளும் இந்தத் தாக்குதலில் தப்பவில்லை. 

மிகச்சிறிய அளவிலான பாதிப்புகளைச் சந்தித்துள்ள மற்ற பல்கலைக்கழக மையங்களையும் சேர்த்து, ஈரானின் ஒட்டுமொத்த பொது சுகாதாரக் கட்டமைப்பு இந்தத் தாக்குதலால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மூன்று நெருக்கடி மேலாண்மை மையங்கள், பல 24 மணிநேர சேவை மையங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதால், காயமடைந்தவர்களுக்கான அவசர சிகிச்சை அளிப்பதில் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset