நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹார்முஸ் பாதை முடக்கம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

தெஹ்ரான்: 

அமெரிக்கா, இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடிய நிலையில், அதை மீண்டும் திறக்க வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பும்(NATO), சீனாவும் உதவ வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார்.

இந்த முக்கிய கடற்பாதையை ஈரான் மறித்ததையடுத்து உலகளாவிய எண்ணெய் விலை 40 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்தது. மேலும், அமெரிக்காவின் இராணுவ நலன்கள் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள வசதிகளையும் ஈரான் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்களை பாதுகாப்புடன் அனுப்புவதற்காக தங்களின் கப்பல்களை அனுப்ப வேண்டும் என டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். 

அந்த நீரிணையை பயன்படுத்தி பல நாடுகள் பலனடைந்து வருவதால், அதன் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவர்களின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த கோரிக்கைக்கு எதிர்மறையான பதில் கிடைத்தால் ‘NATO’ அமைப்பின் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், மற்ற நாடுகள் இந்த மோதலில் தலையிட வேண்டாம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளிநாட்டு தலையீடு பிரச்சினையை தீர்க்காது, மாறாக மேலும் தீவிரப்படுத்தும் என ஈரான் வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset