செய்திகள் உலகம்
இஸ்ரேல் தொடர்ந்து 16-வது நாளாக அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடியுள்ளது
பைதுல்முகத்திஸ்:
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகாரிகள், ஆக்கிரமிக்கப்பட்ட பைதுல்முகத்திஸில் உள்ள அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தைத் தொடர்ந்து மூடி வைத்துள்ளனர். இதன் காரணமாக பக்தர்கள் அந்த புனித இடத்திற்குள் செல்ல முடியாமல், தொடர்ந்து 16-வது நாளாக தடுக்கப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீன செய்தி நிறுவனம் (WAFA) தெரிவித்துள்ளது.
1967ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, புனித ரமலான் மாதத்தின் இறுதி நாட்களில் அல்-அக்ஸா பள்ளிவாசலில் தொழுகை செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு பைதுல்முகத்திஸ் ஆளுநர் அலுவலகம், தொடர்ந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் மத்தியில் “டெம்பிள் அமைப்புகள்” என அழைக்கப்படும் தீவிரவாதக் குழுக்கள் அல்-அக்ஸாவைக் குறிவைத்து ஆபத்தான தூண்டுதல் பேச்சுகளை அதிகரித்து வருகின்றன என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
தற்போது நடைபெற்று வரும் இந்த நடவடிக்கையை, இஸ்ரேல் அதிகாரிகள் கூறுவது போல தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கையாக கருத முடியாது என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
மாறாக, அந்த பள்ளிவாசலின் மத, வரலாறு, சட்ட அந்தஸ்தை மாற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் அரசியல், சிந்தனைக் கொள்கை சார்ந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 11:03 am
பாக்தாத், துபாய் சர்வதேச விமான நிலையங்கள் தாக்குதல்
March 16, 2026, 10:04 am
ஹார்முஸ் பாதை முடக்கம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
March 16, 2026, 9:47 am
“என் மரணமா?” : சமூக வலைதள வதந்திகளுக்கு நெத்தன்யாகுவின் நகைச்சுவை பதில்
March 15, 2026, 4:32 pm
50 அனாதைச் சிறுவர்களுக்கு நிதியுதவியும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கல்: டத்தோ டாக்டர் முஸ்தபா
March 15, 2026, 4:01 pm
இராணுவ பதற்றம் அதிகரிப்பு: வடகொரியாவின் ஏவுகணை சோதனை
March 15, 2026, 10:16 am
எண்ணெய் மையங்களை குறிவைக்கும் தாக்குதலா?: புஜைராவில் பெரும் புகைமூட்டம்
March 14, 2026, 1:33 pm
லெபனான் தெற்கில் இஸ்ரேல் தாக்குதல்: மருத்துவ பணியாளர்கள் பலி
March 13, 2026, 7:00 pm
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினர் தாயகம் அனுப்பப்படுகின்றனர்
March 13, 2026, 6:58 pm
