நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லெபனான் தெற்கில் இஸ்ரேல் தாக்குதல்: மருத்துவ பணியாளர்கள் பலி

பெய்ரூத்: 

லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 12 மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்தனர்.

புர்ஜ் கலாவியா நகரில் நடைபெற்ற தாக்குதலில் ஒரு சுகாதார மையத்தில் பணியாற்றிய மருத்துவர், பராமெடிக் பணியாளர்கள், செவிலியர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவானே நகரில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஹிஸ்புல்லா, அதன் கூட்டணி அமல் இயக்கத்துடன் தொடர்புடைய இரு பராமெடிக் பணியாளர்களும் உயிரிழந்தனர்.

நேற்று, ஸ்ராரியே, தய்ர் ஃபல்சே நகரங்களுக்கு இடையில் லிடானி ஆற்றைக் கடக்கும் பாலத்தை இஸ்ரேல் அழித்தது. இந்தப் பாலம் ஹிஸ்புல்லாவிற்கு முக்கியமான பாதையாகக் கருதப்படுகிறது.

அந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சில சாலைகளையும் இஸ்ரேல் குண்டுவீசி தாக்கியதால், லிடானி ஆற்றின் வடக்குப் பகுதியிலிருந்தும் பெகா பள்ளத்தாக்கிலிருந்தும் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், நேபாளத்தைச் சேர்ந்த அமைதிப் பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் (PBB) முகாமை இஸ்ரேலின் குண்டு தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முகாம் மைஸ் அல்-ஜபால் நகரில் அமைந்துள்ளது.

லெபனான் அதிபர் ஜோசப் ஆவுன் இதற்கு முன்பு இஸ்ரேலுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருந்தாலும், இதுவரை இஸ்ரேலிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

கடந்த வாரம், ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா, ஈரானின் உச்ச தலைவர் அலி காமெனி மரணத்திற்குப் பதிலடி அளிக்கும் வகையில் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து லெபனான் இந்தப் போரில் இழுக்கப்பட்டது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset