நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

“என் மரணமா?” : சமூக வலைதள வதந்திகளுக்கு நெத்தன்யாகுவின் நகைச்சுவை பதில்

பைதுல்மக்டிஸ்: 

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தாம் மரணமடைந்ததாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளை கேலி செய்யும் வகையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு குறும்படக் காணொலியை வெளியிட்டார்.

பைதுல்மக்டிஸ் நகரத்திற்கு வெளியே உள்ள ஒரு கஃபேவில் சூடான காபி கோப்பையை ஏற்றுக்கொள்வதைக் காட்டும் அந்தக் காணொலியில், “காபிக்காக உயிரை கொடுக்கவும் தயார்” என எபிரேய மொழியில் பயன்படுத்தப்படும் சொற்றொடரை சுட்டிக்காட்டி நகைச்சுவையாக அவர் கருத்து தெரிவித்தார்.

அதன்பின், அண்மையில் வெளியான அவரது தொலைக்காட்சி உரை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என்ற சமூக வலைதள சந்தேகங்களை குறிப்பிட்டு, தனது கையை கேமரா நோக்கி உயர்த்தி “எத்தனை விரல்கள் இருக்கின்றன என்று எண்ண விரும்புகிறீர்களா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இஸ்ரேல், அமெரிக்கா தலைமையிலான இஸ்லாமிய குடியரசுக்கு எதிரான போராட்டம் மூன்றாவது வாரத்தில் நுழைந்த நிலையில், நெத்தன்யாகுவை கொல்லும் என அச்சுறுத்தியுள்ளது. 

அவர் உயிருடன் இருந்தால் “குழந்தைகளை கொன்றவன்” எனக் குற்றம் சாட்டி அவரை வேட்டையாடி கொல்ல உறுதிமொழி எடுத்துள்ளதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset