
செய்திகள் மலேசியா
தடுப்பூசி நன்கொடை விவகாரம்: பினாங்கு முதல்வர் காவல்துறையால் விசாரிக்கப்பட வாய்ப்பு
ஜார்ஜ்டவுன்:
தடுப்பூசி நன்கொடை தொடர்பாக பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோவிடம் (Chow Kon Yeow) காவல்துறை விசாரிக்க வாய்ப்புள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பினாங்கு காவல்துறை ஏற்கெனவே 7 பேரிடம் வாக்குமூலம் பெற்றிருப்பதாக காவல்துறை தலைவர் சஹாபுடீன் அப்துல் மனான் தெரிவித்தார்.
இவர்களில் ஒருவர்தான் பினாங்கு அரசுக்கு தடுப்பூசி தொடர்பாக கடிதம் எழுதியதாகத் தெரிகிறது.
பினாங்கு மாநிலத்துக்கு சுமார் 2 மில்லியன் தடுப்பூசிகளை நன்கொடையாக தர ஒரு நிறுவனம் முன்வந்திருப்பதாக அம் மாநில முதல்வர் அண்மையில் தெரிவித்திருந்தார். அவற்றைப் பெற்றுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந் நிலையில் பினாங்கு முதல்வர் குறிப்பிட்டது போன்ற ஒரு நிறுவனமே இல்லை என்று அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் காவல்துறை இதுகுறித்து விசாரணையை தொடங்கி உள்ளது.
சபாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர்தான் சினோவாக் தடுப்பூசிகளை பினாங்கு மாநிலத்துக்கு நன்கொடையாக தர இருந்ததாக கூறப்படுகிறது.
இந் நிலையில் ஹாங்காங்கில் உள்ள குறிப்பிட்ட ஒரு நிறுவனம் தடுப்பூசி நன்கொடை தொடர்பாக ஏதேனும் உறுதிமொழி அளித்திருந்ததா என்பது குறித்தும் காவல்துறை விசாரிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm