நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மகிந்த ராஜபக்சேவின் சொகுசு பங்களாக்கள் எரிப்பு

கொழும்பு:

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள தன்னெழுச்சி போராட்டக்காரர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் சொகுசு பங்களாக்களுக்கு தீயிட்டு கொளுத்தினர்.

இலங்கையில் அத்தியாவசிய பொருள்களின் விலை கடும் உச்சத்தை எட்டியுள்ளதால் பெரும் அவதிக்கு உள்ளான அனைத்து தரப்பு மக்களும் சாலைகளில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் ராஜபக்சே குடும்பத்தினரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டங்கள் தீவிரமடைந்ததால் வேறு வழியில்லாமல் மகிந்த ராஜபக்சே திங்கள்கிழமை தனது ராஜிநாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பி வைத்தார்.

இதையடுத்து, மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் அமைதி வழியில் போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் காரில் வந்து போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட ஆளும் கட்சி எம்பியை மக்கள் துரத்தி சென்றனர்.

ஒரு கட்டடத்தில் தஞ்சம் அடைந்த அதுகொளரளா எம்.பி.யும் அவரது பாதுகாவலரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

அம்பந்தோட்டாவில் உள்ள ராஜபக்சே தந்தையின் நினைவிடைத்தையும், ராஜபக்சே சொகுசு பங்களாவையும் போராட்டக்காரர்கள் விட்டு வைக்கவில்லை. அவற்றை சூறையாடிவிட்டு தீயிட்டு கொளுத்தினர்.

இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆளும் எம்.பி.க்களின் பங்களாக்கும் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

இதனிடையே, நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வன்முறையையடுத்து, உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக காவல் துறை அறிவித்தது. காலிமுகத் திடல் பகுதியில் காவல் துறையினருக்கு உதவும் வகையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

நாட்டில் அமைதியை நிலைநாட்ட பொதுமக்கள் ஆதரவு தரும்படி பாதுகாப்புத் துறைச் செயலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset