நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திறந்த இல்ல உபசரிப்பு இனங்களுக்கு இடையேயான ஒற்றுமையை வளர்க்கும்: பிரதமர்

புத்ராஜெயா:

திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வுகள் இனங்களுக்கு இடையேயான ஒற்றுமையை வெகுவாக வளர்த்தெடுக்கும் என பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.

பிரதமர், அமைச்சர்கள் சார்பில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்பில் அனைத்து வகை பின்புலங்களையும் சேர்ந்த மக்கள் பங்கேற்றதைக் கண்டு தமக்கு மகிழ்ச்சி் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று ஸ்ரீ பெர்டானாவில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றுப்பரவல் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வை நடத்த முடியாததால், இந்த முறை இந்த நிகழ்வு கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்றார் பிரதமர்.

“Aidilfitri நோன்புப் பெருநாள் அனைத்து மலேசியர்களாலும் கொண்டாடப்படுகிறது. இவ்வேளையில் நாம் அனைவரும் உண்மையாக ஒருவரையொருவர் மனதார மன்னிக்க வேண்டும்.

Celebrating Aidilfitri together shows unity of Keluarga Malaysia, says PM |  The Edge Markets

"மன்னிப்பு என்பது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. பிணைப்புகளை வலுப்படுத்த இந்த சியாவல் மாதத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்," என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் வலியுறுத்தினார்.

நோன்புப் பெருநாள் விடுமுறையைக் கொண்டாடிவிட்டு, பயணத்தைத் தொடங்கும் முன், சாலைகளைப் பயன்படுத்துவோர் போதுமான ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் சோர்வாக அல்லது தூக்கக் கலக்கமாக உள்ளவர்கள் உடனடியாக பயணத்தை நிறுத்திவிட்டு சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset