நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறப்பு நுழைவு அனுமதி பாஸ் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மலேசியாவில் 6 மாதங்கள் தங்கலாம்: சைஃபுடின் நசுத்தியோன் 

பெட்டாலிங் ஜெயா: 

சிறப்பு நுழைவு அனுமதி பாஸ் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆறு மாத காலத்திற்கு நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். 

எதிர்க்காலத்தில் இந்தக் கால அவகாசம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்றும், சம்பந்தப்பட்ட பாஸ் வைத்திருப்பவர்களுக்கு பல்வகை நுழைவு விசா (MEV) வசதிகளும் வழங்கப்படும் என்றும் கூறினார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குறிப்பிட்ட பாஸ் எதுவும் இல்லை.

முன்பு அவர்களுக்கு நாட்டின் தகுதிகளுக்கு ஏற்ப 14 முதல் 90 நாட்கள் வரையிலான கால அளவு கொண்ட பொது வருகை அனுமதிக்கான பாஸ் மட்டுமே வழங்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விவகாரங்களை எளிதாக்குவதற்காக, குறிப்பாக முதலீடுகளைச் செய்ய உறுதியளித்தவர்களின் விவகாரங்களை எளிதாக்குவதற்காக முதலீட்டாளர் சிறப்பு நுழைவு அனுமதி பாஸ் ஏப்ரல் 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த பாஸ் Xpats Gateway மூலம் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset