
செய்திகள் மலேசியா
39 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவுப் பேருந்து கவிழ்ந்தது: 6 பேர் காயம்
சிரம்பான்:
39 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவுப் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர்.
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (பிளஸ்) வடக்கு நோக்கிச் செல்லும் கிலோமீட்டர் 245.5 இல் அதிகாலை 6 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் சிரம்பானில் உள்ள துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து காலை 6.01 மணிக்கு அழைப்பு வந்ததை அடுத்து ரெம்பாவ் தீயணைப், மீட்பு நிலையத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட மொத்தம் 40 பேர் சிக்கினர். இதி ஆறு பெண்கள் லேசான காயங்களுக்கு இலக்காகினர்.
மற்றவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அதே வேளையில் இவ்விபத்தால் சம்பவ இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என தீயணைப்புப் படை பேச்சாளர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 5:12 pm
அந்நிய நாட்டு வியாபாரிகளுக்கு உள்ள சுதந்திரம் மலேசியர்களுக்கு இல்லை: டத்தோ கலைவாணர்
March 12, 2025, 12:56 pm
மலேசியாவின் கூர்மதி கல்வி மையத்தில் தேர்வான ஒரே தமிழ்ப்பள்ளி மாணவர்: அகிலன் இளங்குமரன்
March 12, 2025, 12:18 pm