நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கண் தெரியாதவர்களும் உடற்பேறு குறைந்தவர்களும் பிச்சைக்காரர்கள் இல்லை; எங்களுக்கும் சம உரிமை கொடுங்கள்: பிரான்சிஸ் சிவா

கோலாலம்பூர்:

கண் தெரியாதவர்களும் உடற்பேறு குறைந்தவர்களும் பிச்சைக்காரர்கள் இல்லை.

எங்களுக்கும் சம உரிமை கொடுங்கள் என்று தன்னிலை மாற்று திறனாளிகள் பயிற்சி மையத்தின் தலைவர் பிரான்ஸ் சிவா வலியுறுத்தினார்.

நாட்டில் அதிகமான கண் தெரியாதவர்களும் உடற்பேறு குறைந்தவர்களும் உள்ளனர்.

பல ஆண்டுகளாக நாங்கள் பல பிரச்சினைகளையும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றன.

இது பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல கோரிக்கைகள் பல மனுக்களையும் கொடுத்துள்ளோம். ஆனால் எங்களுக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.

தற்போது மடானி அரசாங்கத்தின் ஆட்சியிலும் அதே நிலைமை தான் நீடிக்கிறது.

கண் பார்வையற்றவர்களும் உடற்பேரு குறைந்தவர்களும் பிச்சைக்காரர்கள் அல்ல.

மற்றவர்கள் போல் எங்களுக்கும் சம உரிமை வேண்டும். இதுவே எங்களின் கோரிக்கையாகும் என்று பிரான்சிஸ் சிவா கூறினார்.

தலைநகர் சுற்றுவட்டாரங்களில் கண் பார்வையற்றவர்கள் நடந்து செல்வதற்காக சிறப்பு வழிகள் உள்ளது.

ஆனால் சிறப்பு பொறுப்பற்றவர்கள் இந்த வழியில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றன.

இதனால் அன்பரசி என்பவர் கீழே விழுந்து அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்பார்வையற்றவர்கள் நடந்து செல்லும் வழியில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் இன்று மகஜர் வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset