நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாதுகாப்பு இல்லத்தில் எம்ஏசிசி 170 மில்லியன் ரிங்கிட்டை வைத்தது என்று கூறுவது நியாயமற்றது: அசாம் பாக்கி

கோத்தா கினபாலு:

பாதுகாப்பு இல்லத்தில் எம்ஏசிசி 170 மில்லியன் ரிங்கிட்டை வைத்தது என்று கூறுவது நியாயமற்ற குற்றச்சாட்டாகும்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி இதனை கூறினார்.

கடந்த மார்ச் 3 ஆம் தேதி அதிகாரிகள் நடத்திய சோதனையைத் தொடர்ந்து ஒரு பாதுகாப்பு வீட்டில் சுமார் 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஊழல், பணமோசடி தொடர்பான விசாரணையில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி சந்தேக நபராக உள்ளார்.

இது தொடர்பில் அவரிடம் வாக்குமூலமம் பதிவு செய்யப்படவுள்ளது.

இந்த வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக எம்ஏசிசி 13 வங்கி கணக்குகளையும் முடக்கியுள்ளது.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 170 மில்லியன் ரிங்கிட்டை எம்ஏசிசி தான் அந்த பாதுகாப்பு இல்லத்தில் வைத்தது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இக்குற்றச்சாட்டு நியாயமற்றது. அவ்வாறு செய்வதற்கான சாத்தியம் இல்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset