
செய்திகள் மலேசியா
வெளிநாட்டு பிள்ளைகளுக்கு குடியுரிமை பதிவு செய்வதில் ஊழல் செய்ததாக நம்பப்படும் டத்தோஸ்ரீ உட்பட 16 பேர் எம்ஏசிசியால் கைது
கோலாலம்பூர்:
வெளிநாட்டு பிள்ளைகளுக்கு குடியுரிமை பதிவு செய்வதில் ஊழல் செய்ததாக நம்பப்படும் டத்தோஸ்ரீ அந்தஸ்து கொண்ட மருத்துவர் உட்பட 16 பேரை எம்ஏசிசி கைது செய்துள்ளது.
இந்நடவடிக்கை குழுவின் துணைத் தலைமை ஆணையர் அஹ்மத் குசாய்ரி யஹாயா இதனை உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பில் கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜொகூரைச் சுற்றியுள்ள கிளினிக்குகள், சட்ட நிறுவனங்கள் உட்பட பல வளாகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது.
ஒப்ஸ் அவுட்லேண்டர், ஒப்ஸ் பிறப்பு ஆகியவற்றின் கீழ் இச்சோதனைகள் நடத்தப்பட்டது.
அப்போது வெளிநாட்டு பிள்ளைகளுக்கு மலேசிய குடிமக்களாகப் பதிவு செய்வதில் ஊழல் செய்தது கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஓப்ஸ் அவுட்லேண்டரைப் பொறுத்தவரை முக்கிய சந்தேக நபரான ஒரு அரசு ஊழியர் போலி ஆதார ஆவணங்களைப் பயன்படுத்தி குடிமக்கள் அல்லாதவர்களுக்கு பிறப்பு பதிவு விண்ணப்பங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படுகிறது.
மேலும் பிறப்பை உறுதிப்படுத்துவது, ஆவணங்களை வழங்குவது ஆகியவற்றுக்கு பங்கு வகிக்கும் பல மருத்துவமனைகள், மகப்பேறு மையங்களை வைத்திருக்கும் டத்தோஸ்ரீ என்ற பட்டம் கொண்ட ஒரு மருத்துவரும் இந்த நடவடிக்கைக்கு தொடர்புள்ளதாக நம்பப்படுகிறது.
ஓப்ஸ் பிறப்பை பொறுத்தவரை மூன்று முக்கிய சந்தேக நபர்கள் அரசு ஊழியருக்கு கிட்டத்தட்ட18,000 ரிங்கிட் லஞ்சம் கொடுத்து இந்தச் செயலைச் செய்ய முகவர்களாக இருந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இது போலியானது எனக் கண்டறியப்பட்டாமல் இருக்க மருத்துவமனை பிறப்பு உறுதிப்படுத்தும் கடிதங்கள் போன்ற துணை ஆவணங்களைப் பயன்படுத்தி பிறப்பு பதிவு விண்ணப்பங்களுக்கு உதவப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, முகவருக்கும் விண்ணப்பதாரருக்கும் இடையில் இடைத்தரகராக நம்பப்படும் ஒரு சட்ட வழக்கறிஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இம்முகவரின் சேவைகளைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆறு பொதுமக்களையும் எம்ஏசிசி கைது செய்தது என்று குசைரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 5:12 pm
அந்நிய நாட்டு வியாபாரிகளுக்கு உள்ள சுதந்திரம் மலேசியர்களுக்கு இல்லை: டத்தோ கலைவாணர்
March 12, 2025, 12:56 pm
மலேசியாவின் கூர்மதி கல்வி மையத்தில் தேர்வான ஒரே தமிழ்ப்பள்ளி மாணவர்: அகிலன் இளங்குமரன்
March 12, 2025, 12:19 pm
39 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவுப் பேருந்து கவிழ்ந்தது: 6 பேர் காயம்
March 12, 2025, 12:18 pm