நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐடிக் சலாய் உணவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட வாத்து சிலைகள் சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்தது 

ஶ்ரீ மெனாந்தி:

ஐடிக் சலாய்  உணவகத்தின் முன் ஒரு நாற்காலியில் வைக்கப்பட்ட வாத்து சிலைகளின் வரிசை சமூக ஊடக பயனர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இது தொடர்பாக  டிக்டோக் வீடியோவை @farrahhannaishamudin95 எனும் கணக்கில் இந்த காணொலி  வெளியிடப்பட்டது 

நெகிரி செம்பிலனில் உள்ள ஶ்ரீ மெனாந்தியில்  உள்ள உணவகத்திற்கு வெளியே ஒரு நாற்காலியில் மூன்று வாத்து சிலைகள் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது.

மேலும் மூன்று வாத்து சிலைகள் உணவகத்தின் அடையாள பலகையில் தொங்குவதைக் காணலாம்.

இந்த சம்பவம்  நெட்டிசன்களிடமிருந்து பாராட்டுகளையும் நகைச்சுவையான எதிர்வினைகளையும் பெற்றது, ஒருவர் இந்த அமைப்பை ஒரு புத்திசாலித்தனமான சந்தைப்படுத்தல் உத்தி என்று விவரித்தார்.

"சக்திவாய்ந்த மார்க்கெட்டிங்", என்று ஒரு சிலர் கருத்துகளைப் பதிவிட்டனர். மரத்தின் கீழ் புகைபிடிக்கும் கடையுடன், இது ஒரு திகில் படம் போல் தெரிகிறது, என்று சிலரும் கூறினர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset