நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நிய நாட்டு வியாபாரிகளுக்கு உள்ள சுதந்திரம் மலேசியர்களுக்கு இல்லை: டத்தோ கலைவாணர்

கோலாலம்பூர்:

தலைநகரில் அந்நிய நாட்டு வியாபாரிகளுக்கு உள்ள சுதந்திரம் மலேசியர்களுக்கு இல்லை.

தேசிய விசுவாசத்திற்கான நடவடிக்கை குழுவின் மேலாளர் டத்தோ டாக்டர் கலைவாணர் வேதனையுடன் கூறினார்.

முஸ்லிம் மக்கள் நோன்புக் காலத்தில் இங்குள்ள மக்கள் தற்காலிகமாக கடைகளை அமைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு முறையான லைசென்சை டிபிகேஎல் எனப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் கொடுக்கவில்லை.

இதனால் அவர்கள் வியாபாரம் செய்வதற்கும் தடை ஏற்படுகிறது. 

மீறி வியாபாரம் செய்தால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

வியாபாரத்துக்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய முடியாமல் போவது அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக நோன்பு பெருநாள் காலத்தில் மிகப்பெரிய பொருளாதார சுமையை அவர்கள் எதிர்நோக்குவார்கள்.

வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து தஞ்சம் அடைந்துள்ள பலர் தலைநகரில் வியாபாரம் செய்கின்றனர்.

அவர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படாத பட்சத்தில் உள்ளூர் வியாபாரிகளுக்கு விதிக்கப்படும் இது போன்ற தடைகள் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

ஆகவே நோன்பு பெருநாளுக்கு இன்னும் 18 நாட்கள் மட்டுமே எஞ்சி இருக்கும் வேளையில்  கூட்டரசுப் பிரதேச அமைச்சும், டிபிகேஎல்லும் இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் இன்று மகஜர் வழங்கப்பட்டது என்று டத்தோ கலைவாணர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset